MARC காட்சி

Back
அய்யனார் கோயில்
245 : _ _ |a அய்யனார் கோயில் -
246 : _ _ |a அய்யனார் கோயில்
520 : _ _ |a மேட்டுநீரேத்தான் அய்யனார் கோயில் ஆதி அய்யனார் கோயில் என வழங்கப்படுகிறது. இப்பகுதியில் அய்யனார் வழிபாடு பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. கேட்ட வரும் தரும் அய்யனார் , சோணையா சாமியை (19 அடி உயரம்) வணங்க வரும் பக்தர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன் நிறைவேற்ற கிடாவெட்டு அதிகளவில் நடக்கிறது. மேட்டுநீரேத்தான் ஆதி அய்யனார் கோயில் புராதன சிறப்பு மிக்கது. இக்கோயில் மேட்டுநீரேத்தான் - வாடிப்பட்டி நீரேத்தான் மக்களுக்கு பாத்தியப்பட்டது. இருகிராமங்களின் மையப்பகுதியில் கோயில் அமைந்திருப்பது சிறப்பு. இக்கோயிலின் வீடு வாடிப்பட்டி நீரேத்தானில் உள்ளது. புரட்டாசியில் கோயில் விழா இரு நாட்கள் நடக்கும். விழா நடத்துவது குறித்து இரு கிராமத்து பெரியோர் கோயிலுக்கு சென்று அய்யனாரிடம் உத்தரவு கேட்பர். பல நேரங்களில் கேட்டதும் உத்தரவு கிடைக்கும். சில நேரங்களில் கிடைக்காது. இதையடுத்து அடுத்த வாரம் கேட்பர். உத்தரவு கொடுத்தால் 15 நாள் சாட்டு துவங்கும். காப்பு கட்டிய பின் கிராமத்தவர்கள் வெளியூர் போக மாட்டார்கள். சாட்டுதல் தெரிந்தால் வெளியூர்காரர்கள் கிராமத்தை விட்டு வெளியேறி சென்று விடுவர்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், மேட்டுநீரத்தான், மேட்டுநீரேத்தான், வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a இராமச்சந்திரன், அஜித்நிவி, அசோக் வெங்கடேசன், கவுதம் வெங்கடேசன், மீனாட்சி சுந்தரேசுவரன், சுந்தரராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 91 96884 17579
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a மேட்டுநீரேத்தான் கண்மாய் கரையில் இவ்வய்யனார் கோயில் உள்ளது. பல இனத்தவருக்கு குலதெய்வமாக விளங்குகிறது இக்கோயில்.
914 : _ _ |a 10.0627808
915 : _ _ |a 77.9687319
923 : _ _ |a மேட்டு நீரேத்தான் கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a மேட்டுநீரேத்தான் அய்யனார் கோயிலில் கருவறையில் அய்யனார் சாஸ்தா கோலத்தில் அமர்ந்துள்ளார். சாஸ்தாவின் வலதுபுறத்தில் விநாயகர் உள்ளார். கோயில் வளாகத்தில் நீண்ட நெடிய உருவமாக கருப்பசாமி வீச்சரிவாளுடன் வீராவேசமாக நிற்கிறார். இடது கையில் சுக்குமாந்தடியை ஊன்றியுள்ளார். இச்சிற்பம் முழுவதும் சுதையாலானது. இச்சிற்பத்தின் முன்னே மற்றுமொரு கருப்பசாமி உருவம் சிறிய உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அய்யனார் கருவறை விமானத்தில் அய்யன் சுதைச் சிற்பங்கள் மூன்று தளங்களிலும் இடம் பெற்றுள்ளன. மகா மண்டபத்தின் நாற்புறமும் சுதையாலான பூதகணங்கள் நந்திகளுடன் காட்டப்பட்டுள்ளன.
930 : _ _ |a இக்கோயிலில் குடிகொண்டுள்ள அய்யனார், மலையாள தேசத்தை(கேரளம்) சேர்ந்தவர். இந்தப்பகுதி செழிக்க வேண்டும், என்பதற்காக தன் பாதம் பதிக்க நினைத்து நீரேத்தானை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து அவரது ஒரு பாதம் கேரளாவிலும் மற்றொரு பாதம் நீரேத்தானிலும் பதிந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு மேட்டு நீரேத்தானில் படைத்தளம் இருந்தது. அதன் தளபதியிடம் அய்யனார் கனவில் தோன்றினார். மலையாள தேசத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து இப்பகுதியை செழிப்படைய செய்கிறேன். நான் வீற்றிருக்கும் பொருட்டு எனக்கு கோயில் எழுப்பும், என உத்தரவிட்டதாக ஐதீகம். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இருகிராமங்களின் மையப்பகுதியில் கோயில் அமைந்திருப்பது சிறப்பு.
932 : _ _ |a பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளுக்கு நடுவே மேட்டுநீரேத்தான் ஆதிஅய்யனார் கோயில் அமைந்துள்ளது. மிக உயரமான கொடிமரம் இக்கோயிலுக்கு உரியது. கொடிமரம் தாண்டி பலிபீடம், மற்றும் அய்யனின் யானை வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக நீண்ட மண்டபம் நெகிழித் தகடுகளால் விழாக்காலத்திற்காக போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மகா மண்டபம் சிறுகோபுர நுழைவாயிலுடன் வரவேற்கிறது. தொடர்ந்து அய்யனின் கருவறை. கருவறை சதுர வடிவில் உள்ளது. கருவறை விமானம் திராவிடப் பாணியில் மூன்று தளங்களைக் கொண்டதாக உள்ளது. மூன்று தளங்களும் சுதைச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. கோயில் வளாகத்தில் சோணையா சாமியின் 19 அடி உயர சுதைச் சிற்பம் பிரம்மாண்டமாய் உள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a விநாயகர் கோயில், கிருஷ்ணர் கோயில், சின்னமநாயக்கன்பட்டி தொட்டிச்சி அம்மன் கோயில்
935 : _ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி, வாடிப்பட்டியில் இருந்து மேட்டுநீரத்தானை அடையலாம்.
936 : _ _ |a காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
937 : _ _ |a மேட்டு நீரேத்தான்
938 : _ _ |a வாடிப்பட்டி
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a வாடிப்பட்டி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00399
barcode : TVA_TEM_00399
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0002.jpg :
Primary File :

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0001.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0002.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0003.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0004.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0005.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0006.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0007.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0008.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0009.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0010.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0011.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0012.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0013.jpg

TVA_TEM_00399/TVA_TEM_00399_மதுரை_மேட்டுநீரத்தான்_அய்யனார்-கோயில்-0014.jpg